Frog Leg In Samosa: சமோசா பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. சுவையான சமோசாவில் தவளையின் கால்.. அதிர்ச்சியைத் தந்த உணவகம்.. ஆடிப்போன பிரியர்.!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டி பிகானேர் இனிப்பு கடையில் கொடுக்கப்பட்ட சமோசாவில் தவளையின் கால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 12, காசியாபாத் (Uttar Pradesh News): நம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைப் போல வெளியில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமீப காலமாக உணவுப் பொருட்களில் எதிர்பாராத அதிர்ச்சி தரும் பொருட்கள், புழு, பூரான், எலி என கண்டுபிடிக்கப்படுவது வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது.
சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார். Hit By Train While Making Reel: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பறிகொடுத்த குடும்பம்.!
அந்தவகையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பிகானேர் இனிப்பு கடையில் சமோசாவில் தவளையின் கால் இருந்துள்ளது. இது குறித்து அமன் என்ற நபர் புகார் அளித்ததையடுத்து, காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமோசாவில் தவளையின் கால்: