Gujarat BMW 3 Series Crash: 150 கி.மீ அசுர வேகம்; சாலைத்தடுப்பு கம்பியில் சொருகி நின்ற பி.எம்.டபிள்யு கார்; கட்டுப்பாட்டை இழந்து பயங்கரம்.!
அகமதாபாத் நகரில், 8 வழிச்சாலையில் 150 கி.மீ வேகத்தில் பயணித்த கார், சாலையோரம் இருந்த கம்பியில் மோதி நின்ற சம்பவம் நடந்துள்ளது.
நவம்பர் 10, அகமதாபாத் (Social Viral): மனிதர்களின் விரைந்த பயணங்களை உறுதி செய்ய சைக்கிள் தொடங்கி மோட்டார் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், கார், பேருந்து, விமானம் என பலவகை இயந்திரங்கள் நமக்கு உதவுகிறது.
ஆனால், இன்றளவில் அவற்றின் வளர்ச்சியை முழுவதுமாக பயன்படுத்தி பார்த்துள்ள நமக்கு, அதிவேகம் ஆபத்தானது என்பது நன்கு உணரப்பட்டாலும், அதனை விரும்பி மமதையில் செயல்படுகிறோம். இதனால் ஒரு கட்டத்தில் நொடியில் நடக்கும் விபத்து பெரும் சோகத்திற்கும் காரணமாக அமைகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில், 8 வழிச்சாலையில் 150 கி.மீ வேகத்தில் BMW கார் ஒன்று பயணம் செய்துள்ளது. இந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. Lightning Attack Death: மழை நேரத்திலும் விடாத விவசாய பணி; 58 வயது பெண்மணி மின்னல் தாக்கி பரிதாப பலி.!
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்து, இரும்பு காரின் உட்புறம் சொருகி நின்றது. நல்வாய்ப்பாக காரில் ஓட்டுநர் மட்டும் பயணம் செய்த நிலையில், அவர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார்.
இரும்பு அரண் சிறிதளவு விலகி காரில் சொருகியிருந்தாலும், காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கட்டாயம் உயிரிழந்திருப்பார் என்பதற்கு ஆதாரமாக, விபத்து நடந்த பின் எடுக்கப்பட்ட காணொளி பதிவாகியுள்ளது. அந்த காணொளி உங்களின் பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவ.02ம் தேதி இவ்விபத்து சம்பவம் நடந்தது எனினும், அதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.