Hundreds of Crows Cawing: ஒரு காகத்தை பாதுகாக்க இறைச்சிக்கடையை சுத்துப்போட்ட 100 க்கும் மேற்பட்ட காகங்கள்.! பகீர் சம்பவம்.!
சிக்கன் கடையில் இறைச்சித்துண்டுகளை தூக்கிச்செல்லும் காகத்திற்கு பாடம் புகட்ட நினைத்த உரிமையாளரை, 100 க்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்று சேர்ந்து அலறவிட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஜூலை 18, கோநஸீமா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் கோநஸீமா மாவட்டம், தபிபக்கா பகுதியில் தினசரி சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் இறைச்சி கடைகளும் செயல்பட்டு வரும் நிலையில், காகங்கள் பறந்து வந்து இறைச்சி துண்டுகளை தூக்கி செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல இறைச்சிக்கடைகளில் விழிகளை இறைச்சிகள் மீது இருந்து எடுக்காமல் வேலை பார்த்து வந்துள்ளனர். TNPSC Exam Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்; இறுதிவாய்ப்பை தவறவிடாதீங்க.!
மொத்தமாக ஒன்றுகூடிய காகங்கள்:
இதனிடையே, நேற்று காகம் ஒன்று இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரின் கைகளில் சிக்கியதைத் தொடர்ந்து, அவர் காகம் பறந்து செல்லாமல் இருக்க கம்பியுடன் கட்டி வைத்து இருக்கிறார். தன்னை எதோ செய்யப்போகிறார்கள் என பதறிப்போன காகம் அழுதுகொண்டு அலற, அதன் அபயக்குரலை கேட்ட பிற காகங்கள் தனது கூட்டத்தை அழைத்துவந்து அந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளது.
வைரலாகும் வீடியோ:
மேலும், ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட காகங்கள் அங்கு வந்து குவிந்ததால் பலரும் பதறிப்போயினர். இதனையடுத்து, பிற கடைக்காரர்கள் அறிவுரையை ஏற்றுக்கொண்ட இறைச்சிக்கடை உரிமையாளர், காகத்தை விடுவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.