Baby with Tail: 5 மாத கைக்குழந்தைக்கு திடீரென முளைத்த வால்; மருத்துவர் கூறும் காரணம் என்ன?.!
பிறந்து 5 மாதங்கள் மட்டுமேயாகும் குழந்தை ஒன்றுக்கு, முதுகில் தண்டுவடத்தை இணைத்தவாறு வால் போன்ற அமைப்பு ஒன்று தோன்றியுள்ளது.
மார்ச் 16, பெய்ஜிங் (World News): சீனாவில் உள்ள ஹாங்சோ குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதியான பெண் ஒருவருக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை நலமுடன் இருந்த நிலையில், சில நாட்கள் கழித்து குழந்தையின் முதுகுத்தண்டு பகுதியில் வால் போன்ற ஒன்று தோன்றி இருக்கிறது. இதனையடுத்து, ஹாங்கோ குழந்தைகள் நல மருத்துவமனை, நரம்பியல் துறை அறுவை சிகிச்சை துணைத்தலைவர் மருத்துவர் லி, குழந்தைக்கு பரிசோதனை செய்து அதுசார்ந்த நோயையும் கண்டறிந்தார். இவ்வாறான வால் போன்ற அமைப்பை, எம்.ஆர்.ஐ ஸ்கேன் வாயிலாக சோதனையிட்ட மருத்துவர், எலும்பு இல்லாத அமைப்பு 10 செ.மீ நீளம் இருப்பதை உறுதி செய்துள்ளார். Minor Girl Killed by Tuition Master: 15 வயது சிறுமி காதல் பெயரால் சீரழிப்பு.. 43 வயது டியூசன் மாஸ்டரால் கர்ப்பிணி சிறுமி கொடூர கொலை.!
அமெரிக்காவில் முடிந்தது, சீனாவில் காத்திருப்பு: தண்டுவடத்தை சுற்றியுள்ள திசுக்களுடன் காணப்படும் இவ்வாறான தண்டு அமைப்பை உடனடியாக அகற்ற இயலாது என்று கூறியுள்ள மருத்துவ குழுவினர், இது 5 மாதமாகும் குழந்தையின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு உரிய வயதாகிய பின்னரே அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதாக கூறும் மருத்துவர்கள், தாய் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பினும் மருத்துவ நிலைப்படி அதற்கு தற்போது அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் பிறந்து 10 நாட்களேயான குழந்தையின் தண்டுவட வாலை அகற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.