Bihar Heatwave Death: பீகாரை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; தேர்தல் பணியாளர்கள் உட்பட 19 பேர் பரிதாப பலி.!
ஆனால், நடப்பு ஆண்டில் வெப்ப அலை எனது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி பார்த்து வருகிறது.
மே 31, பாட்னா (Bihar News): இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து, கடும் வெப்பமானது பல்வேறு மாநிலங்களை வாட்டி வதைத்து வந்தது. ஒட்டுமொத்த ஆசிய நாடுகளில் சராசரி வெப்பநிலை என்பது 40 டிகிரியை கடந்து பதிவானது. பீகார் மாநிலத்தை பொறுத்தமட்டில், கோடையின் தொடக்கம் முதலே அம்மாநிலம் கடும் வெப்ப அலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் சராசரி வெப்பநிலை என்பது 44 டிகிரி அளவு பதிவாகிறது.
19 பேர் பலி: இயல்பைவிட அதிகரித்த கடும் வெப்பநிலை காரணமாக, அங்கு வசித்து வரும் மக்கள் வெயில் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு அவதிப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்கபாத் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 12 ஆக உயர்ந்துள்ளது, கைம்முற் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட நபர்களும் அடங்குவர். ஆரா, போஜ்புர் பகுதிகளில் 3 பேர் என மொத்தம் 19 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. Woman Gives Birth in KSRTC Bus: பேருந்து பயணத்தில் பிரசவ வலி, பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி.. பிரசவ அறையாக மாறிய அரசுப்பேருந்து.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!
தேர்தல் பணியாளர்களுக்கு நடந்த சோகம்: கைம்முர் மாவட்டத்தில் உள்ள மொஹானியா மருத்துவமனையில் 40 பேர் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அலை சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் தேர்தல் பணியாளர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவர்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியராக பணியாற்றி வந்த ஷநபாஸ் கான் என்பவர், தேர்தல் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உறங்கியபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்: அதேபோல, காவல் உதவி ஆய்வாளர் சதிஷ் குமார், வெப்ப அலை சார்ந்த பிரச்சனையால் உயிரிழந்து இருக்கிறார். இவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், வெப்ப அலையில் மரணம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப அலை மரணங்களால், மருத்துவமனை ஊழியர்கள் தேவையான உதவிகளை செய்ய உஷார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டமாக நாளை நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் முன்கூட்டியே வெயிலுக்கு முன்பு ஜனநாயக கடமையாற்றவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.