Koyambedu Omni Bus Fire: கோயம்பேடு மார்க்கெட்டில் ஆம்னி பேருந்து உட்பட 10 வாகனங்கள் தீ எரிந்த விவகாரம்; சிகிரெட் பிடித்ததால் வந்த வினை.!

இந்த விஷயம் குறித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Accuse Palani Muthu (Photo Credit: @SunnewsTamil X)

ஜூன் 04, கோயம்பேடு (Chennai News): சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் (Koyambedu Market Omni Bus Fire) ஆம்னி பேருந்துகள் மையம் உள்ளது. அதிக பேருந்துகளை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கின்றன. சிறிய அளவிலான பேருந்துகளை இயக்கும் உரிமையாளர்கள், மொத்தமாக ஆம்னி பேருந்து முனையத்தில் மற்றும் மாநகர அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிக்கொடுக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணம் முடிந்ததும் அதனை நிறுத்தி வைக்கின்றனர்.

10 வாகனங்கள் எரிந்து நாசம்:

இதனிடையே, நேற்று மாலை நேரத்தில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் குளிர்பதன கிடங்குக்குக்கு பின்னால் நிறுத்தப்பட்டு இருந்த ஆம்னி பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும், மளமளவென பரவிய தீயின் தாக்கம் காரணமாக, அருகில் இருந்த 7 ஆட்டோக்கள், ஒரு லோடு ஆட்டோ உட்பட 10 வாகனங்கள் தீயில் சிக்கின.இந்த சம்பவத்தில் 10 வாகனங்கள் தீக்கிரையாகின. Team India Road show on Mumbai: வெற்றிக்கோப்பையுடன் மும்பை சாலைகளில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய அணி; மும்பை காவல்துறை முக்கிய அறிவிப்பு.! 

காவல்துறையினர் விசாரணை:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக தீ எரிந்த வாகனங்களில் யாரும் இல்லை என்பதால், எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த விஷயம் குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நபர் ஒருவர் பேருந்துக்குள் சென்று மீண்டும் வரும்போது தீ பரவியது உறுதியானது.

குற்றவாளி கைது:

இதனால் அவர் பேருந்தை தீ வைத்து தப்பிச்சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். சர்ச்சைக்குரிய நபரை கைது செய்து நடந்த விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த பழனிமுத்து (வயது 48) என்பது தெரியவந்ததது. இவர் அளித்த வாக்குமூலத்தில்" தான் பேருந்துக்கு தீ வைக்கவில்லை. Samsung Galaxy Book 4 Ultra: ஏஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய சாம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்; அசரவைக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் இதோ.! 

அதிர்ச்சி வாக்குமூலம்:

அந்த நேரத்தில் சிகிரெட் பிடிக்க பேருந்துக்குள் சென்றேன். சிகிரெட் பிடிக்கும்போது திடீரென தீ பற்றிவிட்டது. அதனை அணைக்க முயற்சித்தும் பலனில்லை. அதனால் பயத்துடன் நான் வெளியேறி தப்பி சென்றுவிட்டேன். அதற்குள் பல வாகனங்களில் தீ பரவிவிட்டது" என கூறி இருக்கிறார். இதனையடுத்து, பழனிமுத்துவை கைது செய்த அதிகாரிகள், சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வீடியோ நன்றி: சன் டிவி