Chennai Shocker: ஆன்லைன் ரம்மி விளையாட்டு; 51 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை..!
51 வயதில் ரம்மி மீது கொண்ட மோகத்தால் 15 லட்சம் பணத்தை இழந்தவர் இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 08, விருகம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள விருகம்பாக்கம் (Virugambakkam), சாலிகிராமம், சத்யமூர்த்தி தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (51). இவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். முதியவரான கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் ரம்மி (Online Rummy Game) விளையாடும் பழக்கத்தை கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. Attack on Tamil Nadu Fishermen: இலங்கை கடற்படையை தொடர்ந்து, கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.!
ரூ.15 இலட்சம் இழப்பு:
இதனால் எப்போதும் ரம்மி விளையாடி வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இப்பழக்கம் தொடர்ந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக ரூ.15 இலட்சம் வரை இழந்துள்ளார். முதலில் சிறிய தொகைகளை இழந்தவர், பின்னாளில் அதன் மீதான மோகத்தில் விட்டதை பிடிக்கிறேன் என மொத்தமாக ரூ.15 இலட்சம் வரை இழந்துள்ளார். இதனால் விரக்திக்கு சென்றதாகவும் தெரியவருகிறது.
தூக்கிட்டு தற்கொலை:
இதனிடையே, நேற்று தனது பிள்ளைகளுக்கு இதுவே தனது இறுதி நாள் என குறுஞ்செய்தி அனுப்பியவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தந்தையின் செல்போனில் இருந்து சர்ச்சைக்குரிய தகவலை பெற்ற பிள்ளைகள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது விபரீதம் புரிந்துள்ளது. இந்த விஷயம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.