ஆகஸ்ட் 08, வேதாரண்யம் (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர் அன்பழகன். இவர் உட்பட 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்று, கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கு பகுதியில் தங்களுக்கு சொந்தமான படகில் இருந்தபடி மீன்பிடித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். பின் அவர்களின் செல்போன், ஜிபிஎஸ் கருவி, மீன்கள் மற்றும் மீன்பிடி வலை ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மீனவர் அன்பழகனின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Minor Girl Dies By Electric Shock: குளிர்சாதனப் பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி:
இதனையடுத்து, விரைவாக கரைக்கு திரும்பிய மீனவர்கள், அன்பழகனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விசயம் தற்போது தமிழக மீனவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இலங்கை கடற்படையின் அட்டகாசத்தால் சமீபத்தில் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். விரைவில் இலங்கை - இந்தியா அதிகாரிகள் இடையேயான 2 + 2 உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டத்தின்போது தமிழக மீனவர்களின் நலன் மற்றும் பிரச்சனைகள் குறித்து விரைந்து தீர்வு காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.