Trending Video: யானையுடன் போட்டோ எடுக்க முயற்சி; துரத்திய யானையால் பதறி ஓடிய இருவர்.!

வனவிலங்குகள் பார்க்க சாதுவாக தெரிந்தாலும், அவைக்கு நாம் தீங்கு விளைவிப்போம் என தெரிந்தால் மூர்க்கத்துடன் செயல்படும் குணம் கொண்டவை என்பதால் கவனம் வேண்டும்.

Elephant Chase (Photo Credit: Facebook)

பிப்ரவரி 02, மைசூர் (Mysore): சாலை வழிப் பயணங்களில் நாம் எப்போதும் புதுவிதமான அனுபவத்தை பெறலாம். சுற்றுலா உட்பட பிரத்தியேக பயணங்களின் போது, எதிர்பாராத சில திருப்பங்களும் நமது பயணத்தின் முடிவாக அமையலாம். அந்த வகையில், மலைச்சாரக பகுதியான கர்நாடக மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது. இதில் மைசூர் மாவட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் வழி, யானைகளின் பிரதான வாழ்விடமாக இருந்து வருகிறது.

வனவிலங்குகளிடம் கவனம் தேவை: இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு நடுவே செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வனத்துறையினர் அவ்வழியாக பயணிக்கும் போது முன்னெச்சரிக்கையாக யானை உட்பட எந்த விலங்குகள் சாலையோரத்தில் இருந்தாலும் அதனை காண்பதற்கு வாகனத்தை நிறுத்தக்கூடாது, உணவளிக்க கூடாது, அவற்றின் அருகே நின்று போட்டோ வீடியோ போன்றவை எடுக்க கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர். US Indian Student Died: அமெரிக்காவில் அடுத்தடுத்த அதிர்ச்சி.. இந்திய மாணவர் மர்ம மரணம்..! 

அலட்சியம் உயிரை பறிக்கலாம்: இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்கள் அங்குள்ள சாலையோரங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் வைக்கப்பட்டு இருக்கும். ஆனால், ஒரு சில நேரம் இதனை பொருட்படுத்தாத சில அலட்சியவாதிகளால் அவர்களின் உயிருக்கு ஆபத்தும் நடக்கிறது. அதனை போன்றதொரு சம்பவம் தற்போது மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது. நல்வாய்ப்பாக இரண்டு பேர் யானையின் தாக்குதலில் இருந்து தப்பிய நிலையில், ஒருவர் தவறி கீழே விழுந்துவிட்ட போதிலும் யானை அவரை எச்சரித்தபடி அங்கிருந்து விட்டு சென்றது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

விடியோவை காண இங்கு அழுத்தவும்: https://www.facebook.com/reel/745039571057064