Namakkal: மாமியார், மாமனார், கணவர் தூக்கிட்டு தற்கொலை.. தனிகுடித்தனத்திற்கு வற்புறுத்தி நடந்த சண்டையால் சோகம்.!
திருமணம் முடிந்த 7 மாதங்களில், கணவன் - மனைவி தகராறு காரணமாக, கணவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்த சோகம் நாமக்கல்லை அதிரவைத்துள்ளது.
டிசம்பர் 16, எருமைப்பட்டி (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், எருமைப்பட்டி, ஏ. வாழவந்தி கிராமம், அருந்ததியர் காலனியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 50). இவரின் மனைவி பூங்கொடி (வயது 47). தம்பதிகளுக்கு சுரேந்தர் (வயது 25) என்ற மகன் இருக்கிறார். இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர், அங்குள்ள வேட்டம்பாடி கிராமத்தில் வசித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே, தம்பதிகளுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நிலவி வந்துள்ளது. இதனிடையே, நேற்று முன்தினமும் சினேகா - சுரேந்தர் சண்டையிட்டுள்ளனர்.
அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம்:
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சினேகா, வேட்டம்பாடி கிராமத்தில் இருக்கும் பெற்றோரின் வீட்டிற்கே சென்றுவிட்டார். சுரேந்தர், தனது மனைவிக்கு தொடர்புகொண்டு, வீட்டிற்கு வர அறிவுறுத்தியுள்ளார். சினேகாவோ பிடிவாதமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் செல்வராஜ் மற்றும் அவரின் பெற்றோர் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. நீண்ட நேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். Vellore News: 3 வயது மகனுடன் தாய் மர்ம மரணம்; காதல் திருமணம் நடந்த 5 ஆண்டுகளில் அதிர்ச்சி.. கணவருக்கு தர்ம அடி.!
தாய்-தந்தை, மகன் சடலமாக மீட்பு:
அப்போது, செல்வராஜ், பூங்கொடி, சுரேந்தர் மூவரும் தூக்கிட்டு நிலையில் இருந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், எருமைப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாசத்தால் வந்த பங்கம்:
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதுமணத்தம்பதியான சினேகா, தனிக்குடித்தனம் செல்ல விரும்பி இருக்கிறார். அதற்காக கணவரையும் கட்டாயப்படுத்தி உள்ளார். சுரேந்தரின் பெற்றோரோ, தங்களின் ஆசையான ஒரே மகன் என்பதால், தனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் கணவருடன் கோபித்துக்கொண்டு சினேகா தாயின் வீட்டிற்கு சென்றுவிட, விரக்தியில் தாய், தந்தை, மகன் என குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்தது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.