Salem Accident: அரசியல்கட்சித் தலைவர் கான்வேயுடன் பயணித்த கார் - டூவீலர் மோதி பயங்கரம்; கூலித்தொழிலாளி பலி.!
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
டிசம்பர் 21, சேலம் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில், அஇஅதிமுக (AIADMK) பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) வீடு உள்ளது. அலுவல், அரசியல் என பயணங்கள் தொடர்ந்தாலும், அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டிற்கு வந்து செல்வார். இவருடன் பாதுகாப்பு & கட்சி தொண்டர்களின் வாகனமும் உடன் பயணம் செய்யும். இதனிடையே, சம்பவத்தன்று எடப்பாடி பழனிச்சாமி தனது வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது, அவருடன் அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரும் பயணித்து இருக்கிறார். இவர்களின் வாகனம் சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டு இருந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில், சாலை சந்திப்பு ஒன்றில் இருசக்கர வாகன ஓட்டி சாலையை கடந்தார். Electrocution Death: பேருந்தின் மீது பாய்ந்த மின்சாரம்; வெறும் காலை தரையில் வைத்தவுடன் துடிதுடித்து பறிபோன உயிர்..!
கார் - இருசக்கர வாகனம் (Two-Wheeler Bike Collision) மோதி பயங்கரம்:
எடப்பாடி பழனிசாமியுடன் வந்த வாகனங்களில் அனைத்தும் முன்னால் சென்றுவிட, இருசக்கர வாகன ஓட்டி சாலையை கடந்து இருக்கிறார். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக, பின்னால் சில நொடிகள் இடைவெளியில் தாமதமாக வந்த ஒன்றிய செயலாளர் கார், கூலித்தொழிலாளி இயக்கி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளின் பதிவுப்படி, கடந்த டிச.19 அன்று, மாலை சுமார் 03:35 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அரசியல்வாதிகள், அரசுப்பொறுப்பாளர்கள் பயணம் செய்யும் கார் எப்போதும் சீறிப்பாயும் என்பதால், சாலைகளில் பயணம் செய்வோர் இவ்வாறான நிலையை எதிர்கொள்ள வேண்டி இருந்தால், பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அதேநேரத்தில், அரசியல் தலைவர்கள் தங்களின் இலக்கை அடையும் வேகத்தில் பயணம் செய்தால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளதை உறுதி செய்வதும் வேண்டும். மேற்கூறிய விபத்தின் பிற விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கார் - இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்ததன் பதறவைக்கும் காணொளி:
வீடியோ நன்றி: தந்தி தொலைக்காட்சி