டிசம்பர் 21, வாணியம்பாடி (Ranipet News): இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி (Vaniyambadi), வெங்கடாபுரம் பகுதியில் வசித்து 40 பேர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனியார் பேருந்தில் சென்று இருக்கின்றனர். பேருந்து ஆற்காடு (Arcot) பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது, ஓட்டுனரிடம் டீ குடிக்க வேண்டும் என பயணிகள் கூறியதால், ஓட்டுனர் முப்பதுவெட்டி என்னும் பகுதியில் இருந்த டீக்கடை ஒன்றில் பேருந்தை நிறுத்தி இருக்கிறார்.
பேருந்தில் பாய்ந்த மின்சாரம்:
அப்போது, மின்சார கம்பிகள் (Electrocution Death) தாழ்வாக சென்றதாக தெரியவரும் நிலையில், அதனை ஓட்டுநர் கவனிக்கவில்லை. இதனால் பேருந்து மின்கம்பியின் மீது உரசி, பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து இருக்கிறது. இந்த விஷத்தை அறியாமல் பேருந்தில் இருந்து அகல்யா என்ற 20 வயதுடைய பெண்மணி, பேருந்தின் பக்கவாட்டு கம்பிகளை பிடித்தவாறு இறங்கி இருக்கிறார். JustIN: சொத்து தகராறில் தலை துண்டித்து கொடூர கொலை; தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்.!
கால்களை தரையில் வைத்ததும் பலி:
இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அகல்யாவை காப்பாற்ற முயன்ற 2 பெரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காலனி அணியாமல் பேருந்தில் இருந்து இரும்பு கம்பியை பிடித்தவாறு அகல்யா இறங்கியதால், மின்சாரம் உடலில் பாய்ந்து அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.