Serial Rapist: சிவகங்கையை அதிரவைத்த சீரியல் ரேப்பிஸ்ட்.. மாவுக்கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை.. எண்ட் கார்ட் போட்ட போலீஸ்.!
10 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளி, பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக காவல்துறையினர் வசம் சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
நவம்பர் 06, காரைக்குடி (Sivagangai News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி (Karaikudi Serial Rapist) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் கிராமங்களில், தனியாக ஆடு-மாடு மேய்க்கச் செல்லும் பெண்கள் கத்தி முனையில் பலாத்காரம் செய்யப்படுவதும், நகைகள் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வந்தது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
வழிப்பறி:
மர்ம நபரால் பதியாக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னாலும், புகார் வழங்க மறுத்துவிட்டனர். இதனிடையே, குறுந்தம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண், வயலுக்கு சென்று மீண்டும் வந்துகொண்டு இருந்தபோது கத்தி முனையில் அவரிடம் இருந்த காதில் இருந்த தங்கத்தோடு வழிப்பறி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கல்லல், கீழப்பூங்குடி கிராமத்தில் வசித்து ராஜ்குமார் என்பது தெரியவந்தது.
பலாத்கார குற்றவாளி:
ராஜ்குமார் ஏற்கனவே 2020ம் ஆண்டு பலாத்காரம் தொடர்பான வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய நிலையில், அவரே தன்னிடம் நகைகளை பறித்ததாக நகையை பறிகொடுத்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தேவகோட்டை, கல்லல் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ராஜ்குமாரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. Sivagangai Crime: மூதாட்டி, 40 வயது நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது., அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!
கால்களை உடைத்துக்கொண்டார்:
இதனிடையே, தேவகோட்டையில் உள்ள பழைய பாலம் அருகில் ராஜ்குமார் இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கைதுக்கு பயந்து ராஜ்குமார் தப்பிச் செல்ல முயன்ற ராஜ்குமார், பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜ்குமாரின் கால் எலும்பு முறிந்துவிடவே, அதிகாரிகள் ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின் அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் பல அதிர்ச்சி உண்மை அம்பலமானது.
சீரியல் ரேப்பிஸ்ட்:
அதாவது, உறவுக்கார பெண் ஒருவரை மிரட்டி, கடந்த சில ஆண்டுகளாக அத்துமீறி வந்த கயவன், பெண் மறுப்பு தெரிவித்த காரணத்தால் வயது வித்தியாசமின்றி தன்னிடம் சிக்கும் பெண்களை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும், செலவுக்காக பெண்கள் அணிந்த நகைகளை பறித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தேடுவதை அறிந்தும் 2 பெண்களிடம் துணிந்து அத்துமீறிய கொடூரன், தனியாக சிக்கிய இளைஞரிடம் செல்போனையும் பறித்து இருக்கிறார் என்பதும் அம்பலமானது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார். இதன் வாயிலாக சீரியல் ரேப்பிஸ்டாக சிவகங்கையை அதிரவைத்த கயவனின் கொட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.