Auditor Killed by Youth: அக்காவுக்கு பாலியல் தொல்லை; ஆட்டிடரை ஒரே அடியில் கைலாசம் அனுப்பிய தம்பி.. திருவள்ளூரில் சம்பவம்.!
சிங்கம் திரைப்பட பாணியில் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெய்ட் என்பதை, பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கொலை செய்து நிரூபித்துள்ள பதைபதைப்பு சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.
ஏப்ரல் 12, திருவள்ளூர் (Thiruvallur Crime News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகர், பெரியார் தெருவில் வசித்து வருபவர் ராபர்ட் (வயது 48). அங்குள்ள காக்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். ராபர்ட்டின் மனைவி வனிதா (வயது 43). தம்பதிகளுக்கு யஸ்வந்த் என்ற 12 வயது மகனும், அஸ்வினி என்ற 4 வயது மகளும் இருக்கின்றனர்.
உதவி செய்வதாக உடன் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை: நேற்று காலை நேரத்தில் காக்களூர் நெடுஞ்சாலையில், தனது நிறுவனத்தின் வேலை தொடர்பாக (Auditor Sexually Harassed Co Worker) ராபர்ட் சென்று கொண்டிருந்தார். அச்சமயம், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயது இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த தருணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த ராபர்ட், பெண்ணிடம் (Auditor Killed in Thiruvallur) தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
விசாரணையில் இருதரப்பு சமாதானம்: இதனால் அதிர்ந்துபோன இளம்பெண், இவ்விசயம் தொடர்பாக திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் நேற்று மாலை 5 மணியளவில் ராபர்ட்டை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். பின் இரவு 7 மணியளவில் இருதரப்பும் சமாதானம் செய்து கொண்ட நிலையில், அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். Youths Drowned into Canal Water: கால்வாய் நீரில் மூழ்கி துயரம்; 5 இளைஞர்களின் நிலை என்ன?.. வைரலாகும் இறுதிக்காட்சிகள்.!
அக்காவுக்காக பொங்கிய தம்பி: இந்நிலையில், ராபர்ட் மகளிர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரான 23 வயதுடைய மௌலி என்பவர், :என் அக்காவிடம் நீ தவறாக நடக்க முயற்சித்தாயா?" என்று ஆத்திரத்தில் உரத்த குரலில் சத்தமிட்டு, ராபர்ட்டின் தலையில் தனது கையால் பலமாக தாக்கி இருக்கிறார்.
ஒரே அடியில் பறிபோன உயிர்: முன்னதாகவே உடல் நலக்குறைவுடன் பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட், இந்த தாக்குதலில் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன மௌலி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட, காவல்துறையினர் ராபரட்டை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, ராபர்ட் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, திருவள்ளூர் நகர காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மௌலியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)