Trichy Shocker: இரயில் நிற்பதற்குள் அவசரம்; நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் இரயில்வே பணியாளர்.. திருச்சி இரயில் நிலையத்தில் அதிர்ச்சி.!

முன்னாள் இரயில்வே பணியாளர் ஓடும் இரயிலில் இருந்து இறங்க முயற்சித்து இரயில் - நடைமேடை இடையே சிக்கிக்கொண்டு அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

Train Passengers Escape from Death (Photo Credit: @News18Tamilnadu X)

ஆகஸ்ட் 27, திருச்சி இரயில் நிலையம் (Trichy News): சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு (Pallavan Superfast Express) இரயில், தினசரி மக்கள் சேவைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னை - மதுரை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் பல்லவன், பாண்டியன் இரயில்கள் முக்கிய இரயில்களாக மக்களால் கவனிக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் இந்த ரயில்களில் எப்போதும் கூட்டம் என்பது நிரம்பி வழியும். முன்பதிவு செய்யப்படும் இரயில் என்பதால், ரிசர்வேஷன் இல்லாத பெட்டிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். தினமும் காலை 05:35 மணியளவில் காரைக்குடி இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பல்லவன் விரைவு இரயில், திருச்சிக்கு காலை 06:50 மணிக்கு வந்துசேரும். அதனைத்தொடர்ந்து மதியம் 12:10 மணியளவில் சென்னைக்கு சென்றுவிடும். மறுமார்க்கத்தில் மாலை 03:45 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இரயில், திருச்சிக்கு இரவு 08:40 மணிக்கும், காரைக்குடிக்கு 10:35 மணிக்கும் சென்றடையும். Bijili Ramesh: தீவிர ரஜினி ரசிகர், நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்..! சோகத்தில் ரசிகர்கள்.! 

அதிஷ்டவசமாக உயிர்தப்பிய முன்னாள் இரயில்வே பணியாளர்:

அந்த வகையில், இன்று காலை திருச்சி இரயில் நிலையத்திற்கு பல்லவன் இரயில் வருகை தந்தது. அப்போது, இரயில் வந்ததும், நிற்பதிற்குள் இரயிலில் இருந்து இங்க முயற்சித்த முன்னாள் இரயில்வே ஊழியர் ஜெயசந்திரன், நடைமேடைக்கும்-இரயிலுக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதனைக்கண்ட பயணிகள் பதறிப்போன நிலையில், நிகழ்விடத்தில் இருந்த இரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ஜெய்சந்திரனை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஓய்வுபெற்ற இரயில்வே ஊழியரான ஜெயசந்திரன், அதிஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறார்.

கவனமாக இருங்கள் இரயில் பயணிகள்:

ஓடும் இரயிலில் ஏறவோ, இறங்கவோ முயற்சிப்பது உயிரிழப்பை கூட ஏற்படுத்தும் என இரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரயில் நிற்கும் 1 நிமிடத்தில் உயிர்போகும் அவசரம் இல்லாமல், அலட்சியத்துடன் செயல்படும் நபர்கள் எந்த நேரமும் தப்பிப்பது இல்லை என்பதை ஒவ்வொரு இரயில் பயணியும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையேல் உயிரையோ அல்லது உடல் உறுப்புகளையோ இழக்கும் ஆபத்து ஏற்படும்.

இரயிலில் இருந்து தவறி விழுந்த ஜெய்சந்திரனை மீட்கும் காட்சிகள் : 

வீடியோ நன்றி: நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி