Love Couple Suicide: அண்ணா-தங்கை உறவில் மலர்ந்த காதல்; பெற்றோர் கண்டிப்பால் காதல் ஜோடி விஷம் குடித்து மரணம்.!
ஒரே தெருவில் வசித்து ஏற்பட்ட அறிமுகத்தில், அண்ணன் - தங்கை உறவை மறந்து காதலில் விழுந்த ஜோடி, அதில் உறுதியாக இருந்து பெற்றோர் எதிர்த்த காரணத்தால் உயிரை மாய்த்துகொண்ட சோகம் கான்பூரில் நடந்துள்ளது.
ஏப்ரல் 24, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், மஜ்ரா புரன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 23). இதே கிராமத்தில் அர்ஜுனின் உறவுக்காரரின் வீடு உள்ளது. அவருக்கு 16 வயதுடைய (Cousin Brother Sister Love Suicide) மகள் இருக்கிறார். அர்ஜுனும், அவரின் உறவுக்காராரும் சொந்தங்கள் எனினும், அர்ஜுன் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோர் அண்ணன்-தங்கை முறை கொண்டவர்கள் ஆவார்கள்.
அண்ணன்-தங்கை உறவில் விபரீத காதல்: இவர்கள் இருவரின் வீடும் 500 மீட்டர் தொலைவில் இருந்துள்ளன. இதனால் அவ்வப்போது இருவரும் நேரில் சந்தித்து வந்துள்ளனர். நாளடைவில் சந்திப்பு நெருங்கிய நட்பு வட்டாரத்தை உண்டாக்கி, ஒருகட்டத்தில் அண்ணன்-தங்கை உறவு காதலாக மாறியுள்ளது. காதல் வயப்பட்ட இருவரும் காதல் ஜோடியாய் ஊர்சுற்ற, முதலில் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் எழவில்லை. Bullet Proof Jacket: லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா; டிஆர்டிஓ அறிவிப்பு.!
இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்பு: பின் இருவரின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவரவே, அவர்கள் இருவரும் அண்ணன் - தங்கை உறவு என்பதால் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இந்த விஷயம் காதல் ஜோடிகளுக்கு இடையே விரக்தியை ஏற்படுத்த, தாங்கள் திருமணம் செய்துகொள்வதாக போராடியும் பலனில்லை. இதனையடுத்து, காதல் ஜோடி இவர்கள் நம்மை வாழ விடமாட்டார்கள் என்ற விபரீத முடிவுக்கு சென்றுள்ளது.
விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி: இருவரின் திட்டப்படி நேற்று அர்ஜுன் தனது காதலியான 16 வயது சிறுமியின் வீட்டிற்கு மறைமுகமாக சென்று, இருவரும் சந்தித்த பின் விஷம் குடித்துள்ளனர். விஷத்தை அருந்திய இருவரும் தங்களின் வீட்டிற்குள் சென்று எதுவும் தெரியாததுபோல் இருக்க, அர்ஜுன் வீட்டிலேயே பலியாகி சடலமாக கிடந்துள்ளார். 16 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிர் பிரிந்தது.
அதிகாரிகள் விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரெகுநா காவல் துறையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.