King Cobra Drinks Water: ஐயோ.. பாம்புக்கு தண்ணீர் கொடுத்த இளைஞர்.. மனிதத்தை பிஜிஎம் போட்ட இன்ஸ்டா பதிவு.. வினையை விலைகொடுத்து வாங்காதீங்க..!
விடியோவை பார்த்து பைப்பை தேடி ஓடுவோர் மரணத்தை விரும்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15: பாம்பை கண்டால் படையே நடுங்கும் (Tamil Proverb 'Even an army will tremble at the word snake') என்பது தமிழ் மரபு பழமொழி. பாம்பின் விஷத்தால் அதனைக்காணும் பலரும் அஞ்சுவார்கள். சிலர் பாம்பை பற்றி பேசினாலும், பாம்பை வீடியோ அல்லது நேரில் பார்த்தாலும் ஒருவித மன சஞ்சலத்திற்கு உள்ளாகுவர்கள்.
காடுகளில், வயல் வெளிகளில் என எங்கும் நிறைந்து காணப்படும் பாம்புகள், அவ்வப்போது உணவுத்தேடி வீட்டிற்குள்ளும் வருவது உண்டு. இந்த நிலையில், தாகமாக இருக்கும் பாம்பு ஒன்றுக்கு ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. Anupama Parameswaran: அச்சச்சோ.. மேக்கப்பால் நடிகையின் முகத்தில் முளைத்த தாடி, மீசை?.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் வீடியோ வைரல்.!
அதாவது, தாகத்துடன் இருந்த ராஜநாகத்திற்கு ஒருவர் பைப்பில் நீர் கொடுக்கிறார். அந்த நபர் பாம்பு பிடிப்பவரா? வீடியோ யாரால் எப்போது? எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Warning: பாம்புகள் அருகில் செல்லும்போது நீங்கள் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவராக இருப்பினும் கவனம் தேவை. சமூக வலைத்தளங்களில் முகவரியின்றி வைரலாகும் விடீயோக்களை பார்த்து பாம்பு அருகே சென்றால், அது நீங்கள் தீங்கு இழைக்க வருவதாக நினைத்து உங்களை தாக்கலாம். அதனால் மரணமும் ஏற்படலாம். கவனமாக செயல்படவும்.