Leopard Attack: அமைதியாக சென்ற பாதசாரி; திடீரென குறுக்கே பாய்ந்து மரண பீதியை தந்த சிறுத்தை; அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
இதனால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பானது.
ஜூலை 24, நாசிக் (Maharashtra News): மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக், குல்மோஹர் காலனி பகுதியில் சம்பவத்தன்று பாதசாரி ஒருவர் நடந்து வந்துகொண்டு இருந்தார். அவர் சாலை சந்திப்பு பகுதியில் வந்தபோது, நொடிக்கும் குறைவான வேகத்தில் சற்றும் எதிர்பாராத தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது.
சாலையில் தனியே அமைதியாக நடந்து சென்றுகொண்டு இருந்த பாதசாரியை, அவ்வழியே வந்த சிறுத்தை தாக்கி அங்கிருந்து தப்பி சென்றது. தனக்கு என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் சம்பவம் நடந்து முடிந்துள்ளது. UP Minister Pratibha Shukla: தக்காளி விலையை குறைக்க ஒரேயொரு யோசனை இதுதான்; உ.பி அமைச்சர் அதிரடி யோசனை..! என்ன தெரியுமா?.!
அவ்வழியே காரில் சென்ற வாகன ஒட்டி, தனது வாகனத்தை நிறுத்தி பாதசாரிக்கு உதவி செய்துள்ளார். சிறுத்தை பாதசாரியை தாக்கிய சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டம் மலைப்பகுதி மற்றும் மலையை ஒட்டியுள்ள சமவெளிகளை கொண்ட பகுதி ஆகும். இதனால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பானது. தற்போது மழை காலமாக இருப்பதால், இறைதேடி வந்த சிறுத்தை மனிதரை தாக்கி இருக்கிறது.