MSD Autograph Fan Bike: ரசிகரின் இருசக்கர வாகனத்தில் ஆட்டோகிராப் போட்ட தோனி: நொடியில் செய்த நெகிழ்ச்சி செயலால் பாராட்டும் ரசிகர்கள்.!
ரசிகர்கள் மீது அன்பு வைத்துள்ள தல தோனி, அவ்வப்போது தன்னை சந்திக்கும் ரசிகர்களை பண்புடன் நடத்தி, அவர்களின் மனதில் இடம்பெறுவது நடக்கிறது.
நவம்பர் 27, ராஞ்சி (Social Viral): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni). ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்து, கிரிக்கெட்டை எதிர்பாராமல் தேர்வு செய்து படிப்படியாக முன்னேறிய தோனி, இன்று கிரிக்கெட்டின் அடையாளமாக திகளுகிறார்.
சர்வதேச அளவில் கவனிக்கப்படும் கேப்டன் கூல் (Captain Cool), எப்போதும் மைதானங்களில் அதிரடிக்கும், அமைதிக்கும் பெயர்போனவர். தற்போது சர்வதேச அளவிலான பல போட்டிகளில் ஓய்வுபெற்று ஐ.பி.எல் (Indian Premier League IPL) தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர்கிங்ஸ் (Chennai Super Kings) அணியை தலைவராக வழிநடத்துகிறார். Ponvannan Supports Director Ameer Sultan: இயக்குனர் அமீருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நடிகர் பொன்வண்ணன்: கடுமையான கண்டனம்.. விபரம் இதோ.!
சமீபத்தில் தன்மீது பேரன்பு வைத்த தமிழக மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தனது பெயரில் தொடங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், முதல் படமாக Lets Get Married தமிழில் தயாரித்து வழங்கினார்.
இந்நிலையில், தனது ரசிகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் கையெழுத்திட்டு ஆட்டோகிராப் வழங்கிய தோனியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், ஆட்டோகிராப் பதிவு செய்வதற்கு முன்பு, வாகனத்தின் முன்பகுதியை தனது டீ-சர்ட்டால் துடைத்தார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)