நவம்பர் 27, சென்னை (Cinema News): கடந்த 2007ம் ஆண்டு அமீர் (Director Ameer Sultan) இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், நடிகர்கள் கார்த்திக், பிரியா மணி (Priya Mani), பொன்வண்ணன் (Ponvannan), சரவணன், கஞ்சா கருப்பு, சுஜிதா சிவகுமார் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பருத்திவீரன் (Paruthiveeran).

இப்படத்தை முதலில் ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ க்ரீன் சார்பில் தயாரித்து வழங்குவதாக இருந்தது. ஆனால், பின்னாளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் படத்தை வெளியீடு மட்டும் செய்தார். அமீர் தனது சொந்த முயற்சியில் படத்தை பாதிக்கு மேல் தயாரித்து வழங்கினார். இதனால் அமீர் - ஞானவேல் ராஜா இடையே பிரச்சனை நிலவியது.

படம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட நிலையில், 350 நாட்களை கடந்து தமிழகமெங்கும் திரைப்படம் ஓடியது. வசூல் ரீதியாக ரூ.16 கோடி வரை பெற்றது. மக்களின் மனதில் இன்று வரை அப்படத்தின் தாக்கம் அப்படியே இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைகளில் சிக்கிய ஞானவேல் ராஜா, தற்போது மீண்டும் தயாரிப்பு பணிகளில் சமீபத்தில் ஈடுபடத்தொடங்கினார். PM Modi at Tirumala Temple: 140 கோடி இந்தியர்களுக்காக, திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோடி.! 

இதனை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இயக்குனர் அமீரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாகி, பலரும் அமீருக்கு ஆதரவாக பேசத்தொடங்கினார். மேலும், ஞானவேல் ராஜாவின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில், பருத்திவீரன் திரைப்படத்தில் கதாநாயகி பிரியாமணிக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்த பொன்வண்ணன், இயக்குனர் அமீர் படத்தின் போது சந்தித்த பல பிரச்சனைகளை விவரித்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும், இவ்வாறான திமிர் செயல்கள் கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரின் முகநூல் பதிவில், "‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்! அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு . தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான், பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது. Hostage Maya Regev: ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி விடுவிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் குடும்பத்தினர்.! 

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக.. திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..!

அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்.. ப்ரியங்களுடன் பொண்வண்ணன்" என பதிவிட்டுள்ளார்.