Nagarjuna N Convention Demolished: நீர்நிலைகளை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; பிரம்மாண்ட மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..!

தெலுங்கானாவில் குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா கட்டிய மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

Nagarjuna N Convention Demolished (Photo Credit: @TOIHyderabad X)

ஆகஸ்ட் 24, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் நீர்நிலைகள், அரசு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையை அம்மாநில அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த 44 ஆண்டுகளாக ஹைதராபாத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளின் விவரங்களை செயற்கைக் கோள் வாயிலாக அறிந்துகொண்டு, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், 56 குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. Richest Village In Asia: 'ஆசியாவின் பணக்கார கிராமம்' - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?

அதில், மாதப்பூரில் (Madhapur) உள்ள தும்மிடிகுண்டா குளத்தின் பகுதியை பிரபல நடிகர் நாகார்ஜுனா (Actor Nagarjuna) ஆக்கிரமித்து, அங்கு பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் சுமார் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014-ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் (N Convention Hall Demolished) ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 24) காலை இடித்து அகற்றியது. அங்கு பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.