Road Accident: கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பா? உண்மையில் நடந்தது என்ன? அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

புதுச்சேரியில் பைக்கில் தம்பதியினர் சாலை நடுவே இருந்த பள்ளத்தில் வாகனம் தள்ளிச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

Chain Snatching (Photo Credit: Facebook)

நவம்பர் 29, புதுச்சேரி (Puducherry News): புதுச்சேரியில் உள்ள 45 அடி சாலை பகுதியில், கடந்த நவ.24 அன்று இரவு 10:50 மணியளவில், இருசக்கர வாகனத்தில் பொறுமையாக சென்ற தம்பதியை, வாகனத்தில் இருந்தவாறு இளைஞர் செயினை பறித்துச் சென்றதால் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதாக, இணையத்தில் ஒரு விடீயோ வைரலானது. இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chain Snatching: கணவருடன் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு.. பைக்கில் இருந்து விழுந்த தம்பதி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தம்பதிகளிடம் இருந்து நகை பறிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, நகை பறிப்பு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை, சாலை நடுவே இருந்த பள்ளத்தில் வாகனம் தள்ளிச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் விபத்து நகை பறிப்பு காரணமாக நடக்கவில்லை, சாலை நடுவில் இருந்த பள்ளத்தில் இருந்து தப்பிக்க முற்பட்டபோது, அருகில் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்தனர் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement