IPL Auction 2025 Live

Couple Suicide With Children: 2 பெண் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை; கடிதத்தில் பேரதிர்ச்சி பின்னணி.. இளவயது சர்க்கரை நோயால் விபரீதம்..!

தங்களது குழந்தைகளுக்கு இளவயது சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளதை எண்ணி மனமுடைந்த பெற்றோர், குழந்தைகளை கொண்டு தானும் உயிரைமாய்த்த சோகம் நடந்துள்ளது.

Salem Couple Suicide with 2 Children

டிசம்பர் 28, சேலம்: தங்களது குழந்தைகளுக்கு இளவயது சர்க்கரை நோய் (Diabetes Young Age) ஏற்பட்டுள்ளதை எண்ணி மனமுடைந்த பெற்றோர், குழந்தைகளை கொண்டு தானும் உயிரைமாய்த்த சோகம் நடந்துள்ளது.

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சென்னம்பட்டி வனப்பகுதி காவேரி ஆற்றில் 2 சிறுமிகள் உட்பட 4 பேரின் (Couple Commit Suicide & Killed 2 Children) உடல் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஈரோடு மாவட்ட காவல் துறையினர், சடலத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாக, அவர்கள் தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தின்படி, "சேலம் தாதாகாப்பட்டி (Dadagapatty, Salem) பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவரின் மனைவி பான்விழி. இந்த தம்பதிகளுக்கு நிதிக்ஷா என்ற 7 வயது குழந்தையும், அக்சரா என்ற 5 வயது குழந்தையும் என 2 மகள்கள் இருக்கின்றனர். HRaja Angry: “தமிழகம் உருப்படாது., கஞ்சா போதையில் கட்டுக்கடங்காமல் ஆடும் கல்லூரி மாணவர்கள்” – எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு.! 

யுவராஜ் உள்ளூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பான்விழி டைல்ஸ் கடையில் வேலை பார்க்கிறார். தம்பதிகளின் 7 வயது மகளான நிதிக்ஷாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், கடந்த வாரம் இளையமகள் அக்சராவுக்கு இரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கும் சர்க்கரை நோய் உறுதியானது. இதனால் தம்பதியினர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தைகளின் சிரமத்தை மனதளவில் தாங்க இயலாமல் தம்பதி விபரீத முடிவு எடுத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு புத்தாடை உடுத்தி வீட்டில் இருந்து அழைத்து வந்த யுவராஜ் - பான்விழி குழந்தைகளை ஈரோடு சென்னம்பட்டி காவேரி ஆற்றில் வீசிவிட்டு தானும் நீரில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டது அம்பலமானது. மருத்துவர்களின் கூற்றுப்படி சிறுவயது சர்க்கரை நோய்க்கு மருந்துகள் இருக்கின்றன என்பதால், முறையாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 28, 2022 08:36 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).