Chancellor Fired from Job: மனைவியுடன் ஆபாச படங்களில் தோன்றிய பல்கலைக்கழக தலைவர் பணிநீக்கம்; 63 வயதில் செய்யும் வேலையா இது?.!

சுதந்திர உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் அரசு மதிப்பளிக்க வேண்டும். வயதானோர் பாலியல் உறவுகள் குறித்து பேசுவதில், செயல்படுவதில் என்ன தவறு உள்ளது? என கௌ கேள்வியை முன்வைக்கிறார்.

Dr. Joe Gow With Wife Carmen Wilson (Photo Credit: @SexyHappyCouple X)

டிசம்பர் 30, நியூயார்க் (NewYork): அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வேந்தராக பணியாற்றி வருபவர் ஜோ கௌ (வயது 63). இவர் கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் ரீதியான விஷயங்களை முன்னெடுத்து, ஆபாச படங்களில் நடிப்பது தொடர்பான விபரத்தை மாணவர்களிடையே கூறி வந்துள்ளார்.

ஆபாச காணொளியில் நடிப்பு: முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை எனினும், சமீபத்தில் வேந்தர் தனது மனைவி கார்மெண்ட் வில்ஸனுடன் ஒன்லி பென்ஸ் மற்றும் ஆபாச படங்கள் தொடர்பான காணொளியில் நடித்து இருக்கிறார். மேற்கூறிய இணையங்கள் வயது வந்த நபர்களுக்கு, மாத மற்றும் ஆண்டு சந்தா முறையில் பணம் வசூலித்து ஆபாச படங்களை ஒளிபரப்பி வருகிறது.

அதிரடி காண்பித்த பல்கலைக்கழக நிர்வாகம்: இந்நிறுவனத்தில் தம்பதிகள் ஜோடியாக காணொளி பதிவிடவே, தகவல் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பல்கலைக்கழக வேந்தர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருவரின் செயல்பாடுகள் பல்கலை.,யின் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. Ayodhya Dham Airport & Railway Station: அயோத்தியில் இரயில், விமான நிலையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் பிரதமர் மோடி..! 

ஆபாசத்தை விரும்பவது சரியே என உரை: தம்பதிகள் இருவரும் தங்களின் ஆபாச பக்கத்தில் வெளிப்படையான வயது வந்தோர் பார்க்கும் வீடியோவை பதிவேற்றி இருக்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு பல்கலைக்கழக வேந்தர் ஆபாசத்தினை விரும்புவது சரிதான் என சுமார் 90 நிமிடங்கள் உரையாற்றி இருக்கிறார். அதற்காக 5 ஆயிரம் அமெரிக்க டாலர் தொகையையும் தொண்டு நிறுவனத்திற்கு நிதிஉதவியாக வழங்கி இருக்கிறார்.

நிர்வாகத்தின் செயலுக்கு எதிர்ப்பு: தற்போது பல்கலை., நிர்வாகம் பணீநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கௌ, "இது எனது சுதந்திரமான கருத்து உரிமைகளை மீறும் செயல். நான் சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து பேசவில்லை, அவர்களை அடையாளப்படுத்தவில்லை. நாங்கள் இருவரும் வயது வந்தோருக்கான பாலுறவு குறித்து பேசுகிறோம். ஆட்சியாளர்கள் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement