Narrowly Escape From Death: அலட்சியமாக இரயில்வே தண்டவாளத்தை கடந்த நபர்; நூலிழையில் உயிர்தப்பிய பதைபதைப்பு காட்சிகள் உள்ளே.!

தண்டவாளங்களை குறுக்கே கடக்க நினைப்பவர்கள், இரயில் வரும் நேரத்தில் 10 நிமிடம் நிற்க பொறுமையில்லாமல் சென்றால் என்றும் அதிஷ்டம் உங்களின் பக்கத்திலேயே வந்துவிடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Life Saved by Luck (Photo Credit: @SachinGuptaUP X)

ஜனவரி 17, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் (Kanpur) பகுதியைச் சேர்ந்த நபர், தனது மிதிவண்டியில் நகர் பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது இரயில் தண்டவாளத்தில் இரயில் வந்ததைத் தொடர்ந்து, சாலையில் வந்த வாகன ஓட்டிகள் அனைவரும் இரயில்வே கேட் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இரயிலுக்கு குறுக்கே புகுந்த கௌசிக்: அச்சமயம் சிலர் இரயில்வே கேட்டை தாண்டி நடந்து வந்த நிலையில், மேற்கூறிய நபர் தனது மிதிவண்டியில் தண்டவாளத்தை கௌசிக் போல அலட்சியமாக கடந்தார். அப்போது இரயிலானது திடீரென வந்துவிட, அதனை கவனிக்காத நபர் பதறிப்போய் நொடியில் தப்பிச் செல்ல முயற்சித்தார். ஆனால், இரயில் அவரின் மிதிவண்டிமீது மோதியது. இதனால் லேசான காயத்துடன் நபர் உயிர் தப்பினார். கடந்த 14ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. Freezing America: அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்.! 

நொடியியும் விபரீதம் நடக்கலாம் என்பதால் கவனம் தேவை: இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது. வாகனங்களின் பயன்பாடு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல், நொடியில் நமது உயிர் பிரிந்து விடும் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது மிதிவண்டியில் சென்றவரின் செயல் காண்போரை பதற வைத்துள்ளது. இந்த காணொளியில் உயிர்தப்பிய நபர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. விரைவில் அவரின் மீது இரயில்வே அதிகாரிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.