Viral Video: சிறுவனை ஸ்கிப்பிங் கயிறாக மாற்றி ஸ்கிப்பிங் செய்யும் இளைஞர்கள்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!
சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஆப்பிரிக்க இளைஞர்கள் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
செப்டம்பர் 19, ஹராரே (Viral News): சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஆப்பிரிக்க இளைஞர்கள் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கால்பந்து ஆட, மற்ற இளைஞர்கள் அவர் கோல் போடாத வண்ணம் வந்து தடுக்க முயல்கின்றனர். ஆனால் அந்த இளைஞர், தனக்கே உரிய கால்பந்து நுணுக்கத்துடன் எதிரே வருபவர்களிடம் இருந்து பந்தை தட்டி பறித்து கொண்டு செல்கிறார். கடைசியாகதட்டிச் சென்ற பந்தை கொண்டு சென்று கோல் போடுகிறார். Vettaiyan Update: வேட்டையனின் அடுத்த அப்டேட்.. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் அறிவிப்பு..!
இதனையடுத்து அந்த இளைஞருடன் அங்கிருந்த மற்ற இளைஞர்களும் சேர்ந்து உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. பின்னர் ஒரு சிறுவனின் உடலை ஸ்கிப்பிங் கயிறாக வளைத்து, அதில் அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஸ்கிப்பிங் ஆடுகின்றனர். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடைசியாக எல்லோரும் சேர்ந்து ஆடும் குத்து டான்ஸ் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
ஆப்பிரிக்க இளைஞர்களின் வைரல் வீடியோ: