பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலாவியது என்ன?.. உண்மையை உடைத்த டெல்லி காவல்துறை.!
மத்திய அமைச்சரவை பதவியேற்கும் போது, பூனை ஒன்று உலாவிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி போலியான தகவலுடன் வைரலாக, டெல்லி காவல்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): 2024 இந்தியா தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த பாஜக தலைமையிலான தேசிய (NDA Alliance) ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 3வது முறையாக இந்திய அரசை நிர்வகிக்கும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி நேற்று டெல்லி ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் குடியரசு தலைவர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் மொத்தமாக 8 ஆயிரம் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா:
தேசிய அளவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரின் மகன், அதானி குழுமத்தின் உரிமையாளர் கெளதம் அதானி, நடிகர்கள் ரஜினிக்காத, ஷாருக்கான், அக்சய் குமார் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல, வங்கதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் பிரசண்டா தாஹல், மொரிசியஸ் அதிபர் முகம்மத் மியூஸு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, உட்பட பல நாடுகளின் அதிபர்கள், தூதர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிக்கர்ஜுனா கார்கே உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர். Modi Cabinet 3.0 Announcement: மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற நபர்களும், ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளும்.. முழு விபரம் இதோ.!
பூனையை புலியாக (Wild Animal Walked on PM Modi Swearing Ceremony) சித்தரித்த நெட்டிசன்களும், உண்மையும்:
பிரதமரை தொடர்ந்து அமைச்சரவை சகாக்களும் அடுத்தடுத்து பதவியேற்றனர். இந்நிலையில், பதவிப்பிரமாணத்தின் போது, ராஷ்ட்ரபதி பவன் அரங்கில் காட்டு விலங்கு ஒன்று நடமாடியதாகவும், பதவியேற்பு விழா நடக்கும் இடத்திற்கு மிக அருகில் அது உலாவியதும் எனவும் வீடியோ ஒன்று வைரலானது. தற்போது இந்த வீடியோ குறித்த கவனம் டெல்லி காவல் துறையினருக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த வீடியோவில் இடம்பெற்றது சாதரணமாக வீட்டில் வளர்க்கப்படும் பூனை தான். அதனை சமூக வலைத்தளங்களில் காட்டு விலங்கு என தவறான தகவலுடன் சித்தரிக்கப்பட்ட வீடியோ வைரலாகிறது. அதனை நம்ப வேண்டாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.