IPL Auction 2025 Live

Google Map Wrong Direction: கூகுள் மேப்பை நம்பியதால் துயரம்.. கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. வாகன ஓட்டிகளே உஷார்.!

உத்தப்பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Map (Photo Credit: @jsuryareddy X)

நவம்பர் 25, அலிகார் (Uttar Pradesh News): பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது கூகுள் மேப் (Google Map) வழிகாட்டுதலில் செல்வது வழக்கம். அவ்வாறு கூகுள் மேப்பின் வழிகாட்டுதலில் செல்லும்போது சில நேரங்களில் தவறான வழியில் (Wrong Direction) செல்வதுண்டு. சில நேரங்களில் எதாவது விபரீதமான இடத்திற்கு வழிகாட்டிவிடும். அந்த வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருகாபாத்தைச் சேர்ந்த விவேக் மற்றும் அமித் உட்பட மூன்று பேர் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக, குருகிராமில் இருந்து பரேலிக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கூகுள் மேப் உதவியுடன் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஃபரித்பூர் என்னும் இடத்தில் செல்லும்போது கூகுள் மேப் மேம்பாலம் ஒன்றில் ஏறி செல்லும்படி வழியை காட்டியுள்ளது. அது கட்டி முடிக்கப்படாத பாலம். Road Accident: அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த கார்.. 2 பேரின் உயிரை பறித்த அதிவேகம்..!

ஜிபிஎஸ் மூலம் கார், பழுதடைந்த பாலத்தின் மீது ஏறி, ஃபரித்பூரில் 50 அடிக்கு கீழே ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது. ராம்கங்கா ஆற்றில் இந்த மேம்பாலம் இருக்கிறது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளத்தால் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றம் ஜிபிஎஸ்-ல் புதுப்பிக்கப்படவில்லை. மேலும் பாலம் முழுமையடையாமல் கிடப்பதால், வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லை என துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினர்.

கூகுள் மேப்பை நம்பியதால் துயரம்: