Pokkiri Re Release: விஜய் ரசிகர்களே கொண்டாடட்டத்துக்கு தயாரா? - ரீரிலீஸ் செய்யப்படும் "போக்கிரி" - ட்ரைலர் இதோ.!

நடிகர் விஜயின் திரையுலக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அமைந்த போக்கிரி திரைப்படம், ஜூன் 21, 2024 அன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது.

Pokkiri Trailer 4K (Photo Credit: @Rameshlaus X)

ஜூன் 19, சென்னை (Cinema News): கடந்த 2007ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில், வி. பிரபாகரின் வசனங்களில் உருவாகி வெளியான திரைப்படம் போக்கிரி (Pokkiri). நடிகர்கள் விஜய், அசின், வடிவேலு, பிரகாஷ் ராஜ், நாசர், நெப்போலியன் உட்பட பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். 2007 பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான போக்கிரி திரைப்படம், பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி மெகா வெற்றி அடைந்தது. விஜயின் திரையுலக வரலாற்றில் முக்கிய மைல் கல் போல அமைந்த இத்திரைப்படம், பல திரையரங்குகளில் 200 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. கேரளாவில் பலமுறை மறுவெளியீடும் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் நிகழ்கால பதிவுக்கு ஏற்ப மெருகூட்டப்பட்டு, 4கே (Pokkiri Re-Release) தொழில்நுட்பத்துடன் ஜூன் 21 அன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதனால் தயாரிப்புக்குழு படத்தின் ட்ரைலர் (Pokkiri Trailer) காட்சிகளை வெளியிட்டு இருக்கிறது. போக்கிரி படத்தை வீட்டில் உள்ள திரையரங்கில் கண்டு மெய்சிரித்த பலரும், திரையரங்குக்கு சென்று பார்க்க ஆவலுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். Vladimir Putin and Kim Jong Un: காரில் முதலில் ஏறுவது யார்?.. ரஷியா - வடகொரியா அதிபர்களின் செயல்.. உலகளவில் வைரலாகும் நிகழ்வு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif