Russian President Vladimir Putin Visit North Korea, Welcomed by NK President Kim Jong Un (Photo Credit: @SputnikInt X)

ஜூன் 19, பியோங்கியாங் (World News): உலகளவில் சர்வாதிகார ஆட்சி நடந்து வரும் வடகொரியா (North Korea), அமெரிக்காவின் கடுமையான கண்டிப்புக்கு பின்னர் தனித்துவிடப்பட்டுள்ளது. கிம் ஜான் உன் (NK President Kim Jong UN) தலைமையிலான வடகொரிய அரசு, அணு ஆயுதங்களை அமெரிக்காவுக்கு எதிராக முழுவீச்சில் உருவாக்கி வரும் நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அங்குள்ள மக்களுக்கு அதிபர் சார்பில் அவ்வப்போது கடும் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படும்.

கார் பரிசு கொடுத்த ரஷிய அதிபர்:

உலக நாடுகளில் இருந்து தொடர்பை இழப்பதை போல வடகொரியா தனித்து விடப்பட்டாலும், சீனா, ரஷியா உட்பட பிற நாடுகளால் மறைமுக உதவிகளை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷியாவுக்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்றிருந்தார். பல ஆண்டுகளுக்கு பின் வடகொரியா அதிபர் ரஷியா சென்ற நிலையில், அங்கு இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தார். Lorry Car Collision 4 Died: லாரி - கார் நேருக்கு நேர் மோதி, அப்பளமாக நொறுங்கி பயங்கர விபத்து; நண்பர்கள் 4 பேர் பரிதாப பலி..! 

இந்தியா - ரஷியா நட்புறவு மேம்பாடு:

இந்த சந்திப்புக்கு பின்னர் வடகொரியா - ரஷியா நட்புறவு மேலும் வலுப்பெற்றது. ஏனெனில், வடகொரியாவுக்கு பின்னர் ரஷியா உக்ரைன் போரில் ஈடுபட்டதை காரணமாக வைத்து பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்கொண்டது. ரஷியாவிடம் இருந்து உலக நாடுகள் எந்த வணிகமும் செய்யக்கூடாது என அமெரிக்கா கூறினாலும், ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் ஐரோப்பிய யூனியனுக்கு இதயமாக இருக்கிறது. இதனால் வர்த்தகம் முழுவதும் பாதிக்கப்படாத வண்ணம் தொடருகிறது. அதேவேளையில், இந்தியா - ரஷியா நாடுகள் இடையேயான நட்பு பின்னிபிணைக்கப்பட்டது என்பதால், வர்த்தக ரீதியாகவும், பிற பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி என ரஷியா - இந்தியா வணிகம் தொடருகிறது.

ரஷிய அதிபரின் (Russian President Putin North Korea Visit) வடகொரிய பயணம்:

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். கடந்த 2000 ஆண்டு புதின் வடகொரியா சென்றபின், 24 ஆண்டுகள் கழித்து தற்போது அங்கு சென்றுள்ளார். வடகொரிய தலைநகர் பியாங்கோங்கில் உள்ள சுனான் சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று சிகப்பு கம்பளம் விரித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இருதலைவர்களும் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறிது உரையாடினார். Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.! 

முன்னுரிமையை காண்பித்த தலைவர்கள்:

பின் இருவரும் காரில் பயணிக்க முற்பட்டபோது, நட்புறவின் மிகுதியாக இருவரும் ஒரேநேரத்தில் காருக்குள் செல்ல மற்றொரு தலைவர் வலியுறுத்தினார். இருவரும் இரண்டு முறை இவ்வாறு மேற்கொள்ள, இறுதியாக புதின் முதலில் காருக்குள் சென்று அமர்ந்தார். அதன்பின் கிம் ஜாங் உன் மற்றொரு பக்கத்தில் உள்ள கதவு வழியாக காருக்குள் சென்றார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றனர். இதனை ஸ்புட்னிக் "வட கொரியா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முன்னுரிமை அளித்ததால், யார் முதலில் காரில் ஏறுவது என்பதை தீர்மானிக்க முடியவில்லை" என கூறியுள்ளது. ரஷியா மற்றும் வடகொரியா எதிர்ப்பு நெட்டிசன்கள் பலரும் அதனை கலாய்த்து வருகின்றனர்.