Vettaiyan Update: வேட்டையனின் அடுத்த அப்டேட்.. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் அறிவிப்பு..!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 19, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன் ‘சத்யதேவ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Actor Vimal Speech: "கைகொடுத்தாலும் யாருக்குக் கொடுக்கணும். யாருக்கு கை கொடுக்கக்கூடாதுன்னு தெரிஞ்சு கைகொடுக்கணும்" - நடிகர் விமல்..!
வேட்டையன் அப்டேட்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)