Bull Attacks School Girl: பள்ளிக்கு சென்ற சிறுமியை முட்டிதூக்கிய காளை: சாலையோரம் நின்று நொடியில் அதிர்ச்சி செயல்.!
எதிர்பாராத நேரத்தில் காளையின் கொம்புகளில் சிக்கி சிறுமி தூக்கி வீசப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக பச்சிளம் சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
டிசம்பர் 18, நொய்டா (Noida): தனது சுய சம்பாத்யத்திற்காக கால்நடைகளை வளர்க்கும் நபர்கள், அதனை சிலநேரம் மேய்ச்சலுக்காக வீதிகளில் திரியவிடுவதும், அவை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை தாக்குவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா தாத்ரி நகரில், தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்த சிறுமியை எருமை ஒன்று திடீரென தனது கொம்புகளால் முட்டித் தூக்கியது. நல்வாய்ப்பாக சிறுமி லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அலட்சியமாக செயல்படும் நபர்கள் மற்றும் அதனை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் வீதிகள் கால்நடைகளால் சூழப்பட்டு, சிலநேரம் அவை மனிதனின் உயிருக்கும் ஆபத்தாக அமைகின்றன என உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். UPI Transaction Data: 2022 - 2023ம் நிதியாண்டில் ரூ.139 இலட்சம் கோடிக்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை: 148% அதிகம்., மத்திய அரசு அறிவிப்பு.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)