PM Modi on Jhansi Fire Accident: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி., மாநில அரசும் இழப்பீடு அறிவிப்பு.!

ஐசியு வார்டில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் ரூ.2 இலட்சம் நிதியுதவியும், மாநில அரசின் சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

PM Modi (Photo Credit: @ANI X)

நவம்பர் 16, புதுடெல்லி (New Delhi): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேற்று இரவு குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன., சில குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக 54 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 44 குழந்தைகள் பத்திரமாக மீட்டப்பட்டன. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது இரங்கலையும் பதிவு செய்தார். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவியும், காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாநில அரசின் சார்பில் உயிரிழந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு தலா ரூ.5 இலட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 10 Infants Dead: மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.! உ.பி-யில் சோகம்..! 

ஜான்சி தீ விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து, நிதிஉதவி அறிவித்த பிரதமர்: