நவம்பர் 16, ஜான்சி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக 54 பச்சிளம் குழந்தைகள், பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் (Neonatal Intensive Care Unit NICU) அனுமதி செய்யப்பட்டனர். நேற்று மாலை நேரத்தில் இந்த வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. Road Accident: இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய கும்பல்.. கண்டெய்னரில் மோதியதில் 6 பேர் பரிதாப பலி..!
10 குழந்தைகள் பலி:
இதனால் ஒருசில குழந்தைகள் உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 10 பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்சிஜன் வழங்கும் சேவை அமைப்பில் ஏற்பட்ட தீயானது, அறை முழுவதும் பரவி விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. பல குழந்தைகள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், 10 குழந்தைகளை உடனடியாக மீட்க இயலாத காரணத்தால் உயிர்பலி நடந்துள்ளது.
முதல்வர் இரங்கல்:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் (CM Yogi Adityanath), மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மேலும், தேவையான பிற நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். உயிரிழந்த குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு இரங்கலையும் பதிவு செய்தார். தீ விபத்து குறித்து காவல்துறை விசாரணையும் நடந்து வருகிறது.
ஜான்சி மருத்துவமனை வளாகத்தில் கூடிய குழந்தைகளின் உறவினர்கள்:
#WATCH | Uttar Pradesh: A massive fire broke out at the Neonatal intensive care unit (NICU) of Jhansi Medical College. Many children feared dead. Rescue operations underway. More details awaited.
(Visuals from outside Jhansi Medical College) pic.twitter.com/e8uiivyPk3
— ANI (@ANI) November 15, 2024