Trending Video: ஹெல்மெட்டில் சிசிடிவி.. உயிருக்கு பயந்து கேமராவுடன் திரியும் நபரின் வீடியோ வைரல்.!

இந்தூரில் பக்கத்து வீருக்காரர் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் தலைக்கவசத்தில் சிசிடிவி கேமரா பொருத்திக்கொண்டு நபர் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Visual From Video (Photo Credit : @ndtvfeed X)

ஜூலை 15, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் வசித்து வரும் நபர் ராஜு. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்று அச்சப்பட்ட நபர், தனது தலைக்கவசத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தி வெளியே பொது இடங்களுக்கு செல்லும்போது பயன்படுத்தி வருகிறார். மேலும் தான் ஒரு வேலை கொல்லப்படும் பட்சத்தில் இந்த கேமரா பதிவான காட்சிகள் ஆதாரமாக இருக்கக்கூடும் என்றும், அதன் வாயிலாக எதிரிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைக்கவசத்தில் சிசிடிவி கேமராவுடன் அலையும் நபரின் வீடியோ :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement