Thane Shocker: சாலையை கடக்க முயற்சித்த 10 வயது சிறுமி லாரி மோதி தூக்கி வீசப்பட்டு பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

பரபரப்பு மிகுந்த சாலையை கடந்து செல்ல முற்பட்ட சிறுமியின் மீது, அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிறுமி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.

Visuals from Accident Spot (Photo Credit: ANI)

ஜூன் 08, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், ஷில்படா சர்க்கிள் (Shilphata Circle, Thane) பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, அவ்வழியே அதிவேகத்தில் வந்த கனரக வாகனம் சிறுமியின் மீது மோதியதில், சிறுமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஷில்படா சர்க்கிள் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். Liquor Challenge: நேரலையில் மதுகுடித்த யூடியூபருக்கு இப்படியா நடக்கணும்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. சவால் தந்த பரிசாக மரணம்.!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement