Parenting Tips: கதவை தாழிட்டு தவித்த சிறுவன்.. குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே கவனம்.!
Trending Video: வீட்டின் குளியல் அறை கதவை உட்புறமாக இருந்தபடி குழந்தை தாழிட்டு, பின் திறக்க முடியாமல் தவித்த சோகம் நடந்துள்ளது. குடும்பத்தினர் குழந்தையை பத்திரமாக மீட்ட நிலையில், கவனமுடன் பெற்றோர் செயல்பட அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வீடியோ வெளியாகியுள்ளது.
நவம்பர் 05, மும்பை (Viral Video News): சிறுவயதுடைய குழந்தைகள் இருக்கும் வீட்டில், எப்போதும் அவர்களை கண்ணும்-கருத்துமாக கவனிப்பதற்குள் பெற்றோருக்கு பெரும் சிரமம் ஏற்படும். இதனால் ஒவ்வொரு நாளும் தேர்வுகளை போல பெற்றோர்கள் குழந்தைகளை கவனிப்பதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். குழந்தைகள் வளரத்தொடங்கியதும் அதீத ஆர்வம் காரணமாக, நாம் செய்யும் செய்யலை பார்த்து செயல்படுத்த நினைக்கும். இப்படியாக வீட்டின் தாழ்ப்பாளை போட்டுவிட்டு, பின் திறக்கத்தெரியாமல் பல சமயங்களில் பரிதவித்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருசில நேரம் வீட்டின் கதவை உடைத்து குழந்தையை மீட்கும் செயல்கள் நடக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம் வடமாநிலத்தில் நடந்த நிலையில், அதனை பெண் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். நல்வாய்ப்பாக குளியல் அறையில் தவித்த சிறுவனை குடும்பத்தினர் பத்திரமாக மீட்டனர். குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர் கதவின் தாழ்ப்பாளை உயரமாக முன்கூட்டியே அமைப்பது நல்லது. அல்லது தற்காலிகமாக மேலே தாள் இருக்கும் வகையில் ஏற்படுத்தலாம். குழந்தைகளுக்கு தாழ்ப்பாளை போடுவதைப்போல, திறப்பது எப்படி எனவும் கற்றுக்கொடுக்கலாம். Plane Crash: சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்.!
குழந்தை கழிவறை தாழ்ப்பாளை போட்டுகொண்டு தவித்த வீடியோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)