வரதட்சணை கேட்டு 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்ட தந்தை.. பதறவைக்கும் வீடியோ.!
உத்திரபிரதேசத்தில் வரதட்சணைக்காக தனது 8 மாத பச்சிளம் குழந்தையை தந்தை தலைகீழாக தொங்கவிட்டு தூக்கிச்சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
ஜூலை 25, உத்திரப் பிரதேசம் (Uttar Pradesh News): உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவர் தனது மனைவியிடம் நகை, கார், பணம் வேண்டும் என வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார். தனது மனைவியின் குடும்பத்தினரிடமும் இது குறித்து சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்மணி மறுப்பு தெரிவிக்கவே அவ்வப்போது தகராறு செய்து வந்தவர், சம்பவத்தன்று மனைவியிடமிருந்து தனது 8 மாத ஆண் குழந்தையை பிடுங்கி தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் தூக்கி சென்றுள்ளார். வரதட்சணைக்காக பெற்ற குழந்தை என்றும் பாராமல் மனிதநேயமின்றி தந்தை செய்த செயலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தந்தை தூக்கிச்சென்ற வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)