Chlorine Cylinder Leakage: திடீரென கசிந்த குளோரின் வாயு; பாதுகாப்பாக அகற்றும் பணியில் களமிறங்கிய அதிகாரிகள்.!
குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருந்த கைவிடப்பட்ட குளோரின் சிலிண்டரில் இருந்து வாயு கசிய தொடங்கியதால், அதனை பாதுகாப்பாக அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரி 09, டெஹ்ராடூன் (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் மாவட்டம், ஜஹஞ்சரா, பிரேம் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குளோரின் சிலிண்டரில் இருந்து திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த உள்ளூர் மக்கள், உடனடியாக காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் சேர்ந்து குளோரின் சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி, அதனை செயலிழக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனால் மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. Car Truck Accident: லாரியின் மீது கார் மோதி பயங்கர விபத்து; 2 காவலர்கள் பரிதாப பலி.! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)