Thanjavur Cylinder Blast (Photo Credit: @NewsTamil24X7 X)

அக்டோபர் 20, தஞ்சாவூர் (Thanjavur News): நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, புத்தாடை உடுத்தி பட்டாசு வெடிக்க தொடங்கிவிட்டனர். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.7,000 கோடி அளவில் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டு இருக்கிறது. Shocking Video: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: அப்பா வயது நபர் செய்த கீழ்த்தரமான செயல்.. ஷாக் வீடியோ வைரல்.! 

பட்டாசு வெடித்து சிலிண்டர் வெடித்தது:

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறார்கள் வெடித்த பட்டாசு காரணமாக சிலிண்டர் வெடித்துச்சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் இல்லை என்றாலும், சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்துபோனது. இதனால் வீட்டில் வசித்து வந்த மூதாட்டி வீடு போன கவலையில் கண்ணீர் விட்டு அழுதார். சிறார்கள் விளையாட்டுத்தனமாக செய்த காரியம், மிகப்பெரிய விபத்துக்கு வழிவகை செய்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை அணைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

வீடு இடிந்துபோனதால் மூதாட்டி கண்ணீர்: