Rohit Sharma: சதம் அடித்து விளாசிய ரோஹித் சர்மா.. அதிர்ந்த மைதானம்.. கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா 100 ரன்களை கடந்து விளாசி வருகிறார்.
பிப்ரவரி 09, கட்டக் (Sports News): இந்தியா - இங்கிலாந்து (India Vs England 2nd ODI) அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது 50 ஓவர் ஒருநாள் போட்டி, ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கட்டக் மைதானத்தில் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ரோஹித் சர்மா (Rohit Sharma Century), 77 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். சர்வதேச அளவிலான 50 ஓவர் போட்டிகளில், ரோஹித் சர்மா இதுவரை 32 சதம் அடித்து விளாசி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் முன்னதாக 57 வது அரை சதத்தையும் கடந்து இருந்தார். IND Vs ENG 2nd ODI: இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு.. அடித்து நொறுக்கிய இங்கிலாந்து.. கலக்கல் ஆட்டம்.!
சதம் அடித்து விளாசிய ரோஹித் சர்மா:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)