
பிப்ரவரி 09, கட்டக் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 (IND Vs ENG T20i Series 2025) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (India Vs England ODI Series 2025) தொடரிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகளில் டி20 நிறைவுபெற்ற நிலையில் இந்தியா 4 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி ஒரேயொரு டி20 போட்டியை மட்டுமே வென்றது. அதனைத்தொடர்ந்து, ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி 06, 2025 அன்று முதல் போட்டி (IND Vs ENG 1st ODI 2025) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. அப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவரில், 10 விக்கெட்டையும் இழந்து 248 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 251 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இரண்டாவது ஆட்டம் (India Vs England 2nd ODI 2025) போட்டி, ஒடிஷா மாநிலத்தில் உள்ள கட்டக், பார்பாடி (Barabati Stadium Cuttack) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டம் 09 பிப்ரவரி 2025 இன்று, மதியம் 01:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) ஓடிடியிலும் நேரலையிலும் பார்க்கலாம். IND Vs ENG 2nd ODI: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.. இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் இரண்டாவது போட்டி இன்று.!
டாஸ் வென்ற இங்கிலாந்து (India Vs England 2nd ODI Toss Update):
இந்நிலையில், போட்டியில் ரோஹித் சர்மா இன்று டாஸ் சுழற்றிய நிலையில், இங்கிலாந்து டாஸை வென்றது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்டர், பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய அணி பந்துவீச தயாராகி வருகிறது. ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் (IND Vs ENG 2nd ODI Team India Squad) ஆர்.சர்மா, எஸ்.கில், வி.கோலி, கே.எல்.ராகுல், எஸ்.ஐயர், எச்.பாண்டியா, ஆர்.ஜடேஜா, ஏ. படேல், முகமது ஷமி, எச்.ராணா, வி.சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் (IND Vs ENG 2nd ODI Team England Squad) பி.சால்ட், பி.டக்கெட், ஜே.ரூட், ஜே.பட்லர், ஜே.ஓவர்டன், எல்.லிவிங்ஸ்டோன், எச்.புரூக், ஜி.அட்கின்சின், எம்.வுட், ஏ.ரஷீத், எஸ்.மஹ்மூத் ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.

இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து (IND Vs ENG ODI Score Update):
போட்டியின் முதல் பகுதியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடித்து விளையாடி 49.3 ஓவர் வரை நீடித்து நின்றனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் 304 ரன்களை குவித்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய பில் சால்ட் 29 பந்துகளில் 26 ரன்னும், பென் டக்கர் 56 பந்துகளில் 65 ரன்னும், ஜோ ரூட் 72 பந்துகளில் 69 ரன்னும், ஹேரி புரூக் 52 பந்துகளில் 31 ரன்னும், ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் 34 ரன்னும், லிவிங்ஸ்டோன் 32 பந்துகளில் 41 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர். மறுமுனையில் இந்தியா 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
கேட்சை கோழி போல அமுக்கிய விராட் கோலி:
In the air and taken comfortably by Virat Kohli 👌👌
Second wicket for Ravindra Jadeja 😎
Follow The Match ▶️ https://t.co/NReW1eEQtF#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/Eb7Kt3aSg9
— BCCI (@BCCI) February 9, 2025