CSK Official Jersey: 2025 ஐபிஎல் போட்டிக்கு தயாரான சிஎஸ்கே நிர்வாகம்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய டீசர்ட் வெளியீடு.!

ஐபிஎல் போட்டிக்கு அணிகள் விறுவிறுப்புடன் தயாராகி வரும் நிலையில், சென்னை அணி தனது புதிய டி-சர்ட்டை வெளியிட்டு இருக்கிறது. கிரிக்கெட் செய்திகள் (Cricket Updates Tamil) தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் பெற இணைந்திருங்கள்.

TATA IPL 2025 Official Match Jersey for Chennai Super Kings (Photo Credit: @ChennaiIPL X)

பிப்ரவரி 11, சென்னை (Sports News): 18 வது டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள் மார்ச் மாதம் 14, 2025-ல் தொடங்கி, மே மாதம் 25, 2025 ல் (IPL Schedule 2025) நிறைவுபெறுகிறது. இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் (Indian Premier League) போட்டியில், 10 அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும். போட்டியின் முடிவில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 74 போட்டிகள் கொண்ட இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு அணியும் தனது வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தும். சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி, 2008 முதல் நடந்த 17 ஐபிஎல் போட்டிகளில் 5ல் அதிகபட்சமாக வெற்றி அடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் 5 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் 8,004 என்ற அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி (Virat Kohli) இருந்தாலும், அவரின் பெங்களூர் அணி தற்போது வரை ஒரு கோப்பையை கூட பெற்றிருக்கவில்லை. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில், ஐபிஎல் 2025 போட்டிக்கான புதிய டீசர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் போட்டிக்கான புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ள காரணத்தால், ரசிகர்கள் அடுத்தபடியாக ஐபிஎல் ஆட்டத்தை எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர். Shohaly Akhter: உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஷோஹாலி அக்தர் 5 ஆண்டுகள் தகுதிநீக்கம்.!

ஐபிஎல் 2025 போட்டிக்கு சென்னை அணியின் புதிய டீ-சர்ட்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now