Shohaly Akhter (Photo Credit: @AllRoundersDen X)

பிப்ரவரி 11, டாக்கா (Sports News): வங்கதேச பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீராங்கனை ஷோஷாலி அக்தர் (Shohaly Akhter), எதிர்வரும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி (International Cricket Council ICC) உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் அவர் எதிர்வரும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட இயலாது. ஐசிசியின் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில், அவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் ஊழல் செய்தது உறுதியானது. IND Vs ENG 3rd ODI: அதிரப்போகும் குஜராத் மைதானம்.. 3 வது இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. எப்போது? எங்கே? விபரம் உள்ளே.! 

2023ல் நடந்த போட்டியில் முறைகேடு:

இதனால் அவரை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஐசிசி நிர்வாகம் தடை விதித்து இருக்கிறது. வங்கதேச அணிக்காக 13 பெண்கள் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடிய நிலையில், போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில், ஐசிசி விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட வைக்க அவர் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், இதுதொடர்பான புகாரின் பேரில் அவரின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விசாரணை கமிட்டியிடமும் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில், முறைகேடு செய்த முதல் கிரிக்கெட் வீராங்கனை ஆகவும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட முதல் பெண்ணாகவும் ஷோஷாலி அக்தர் தவிர்க்க முடியாத கரும்புள்ளியை பெற்றுள்ளார்.

பெண்கள் கிரிக்கெட் பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் பெண்: