KL Rahul - Sai Sudharsan: 'நல்லா பவுன்ஸ் இருக்கு மச்சி' - கேஎல் ராகுல் வீடியோ வைரல்..!
இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், சாய் சுதர்சனிடம் சீனியர் வீரர் கேஎல் ராகுல் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜூன் 23, லீட்ஸ் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - இந்தியா (ENG Vs IND 1st Test) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இப்போட்டியில், இந்தியா 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அப்போது, கிரீஸில் விளையாடிக் கொண்டிருந்த சாய் சுதர்சனிடம் (Sai Sudharsan) சீனியர் வீரரான கேஎல் ராகுல் (KL Rahul) தமிழில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், 'நல்லா பவுன்ஸ் இருக்கு மச்சி' என கேஎல் ராகுல் பேசியுள்ளார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. CSG Vs TGC: சேப்பாக் - திருச்சி அணிகள் இன்று மோதல்.. சேப்பாக்கின் ஆதிக்கம் தொடருமா..?
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)