Team India Road show on Mumbai: வெற்றிக்கோப்பையுடன் மும்பை சாலைகளில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய அணி; மும்பை காவல்துறை முக்கிய அறிவிப்பு.!

வெற்றிக்கோப்பையுடன் தாயகம் வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் சாலை வழிப்பேரணியாக வந்து ஐசிசி டி20 உலகக்கோப்பையை இந்திய மக்களிடம் நேரடியாக காட்சிப்படுத்துகிறது.

Team India ICC T20 WC Victory | Mumbai Police Help Desk (Photo Credit: @MTPHereToHelp X)

ஜூலை 04, மும்பை (Mumbai): ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை (ICC T20 2024 World Cup Champions) போட்டியில் வெற்றியடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இன்று காலை 7 மணியளவில் டெல்லி வந்தது. டெல்லி வந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டு பெரும் இந்திய கிரிக்கெட் அணி, மும்பைக்கு கோப்பையுடன் வந்து வான்கடே மைதானத்தில் காட்சிப்படுத்தும் அணியினர், சாலை வழிப்பயணத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் மும்பை மாநகரில் வான்கடே மைதானம் உட்பட பல இடங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரை நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ள மும்பை மாநகர காவல்துறை, சம்பந்தப்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் எங்கும் நிறுத்தப்படக்கூடாது. அதிகாரிகள் இதுகுறித்த ஆய்வை செய்து சாலை பேரணியை சிரமமின்றி நடந்த உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Samsung Galaxy Book 4 Ultra: ஏஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய சாம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்; அசரவைக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் இதோ.! 

மும்பை காவல்துறையின் வேண்டுகோள்:

எந்த வழியில் பயணிக்கலாம்.. விபரம் இதோ?

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)