France Educational Tour: பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் 55 ஆசிரியர்கள்; அமைச்சர், முதல்வர் பாராட்டு., வாழ்த்து.!
பிரான்ஸ் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், கல்வி நிலைகள் குறித்து அறிய 55 தமிழக ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.
அக்டோபர் 21, திருச்சி (Trichy News): 2023-24 ஆம் கல்வியாண்டில் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கனவு ஆசிரியர்களை, நேற்று திருச்சியில் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர்களுடன் கலந்துரையாடி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு இந்தப் பதிவு குறித்து நான் அமைச்சரிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் - இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது! இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்!" என தெரிவித்துள்ளார். JK Labour Camp Attack: ஜம்மு காஷ்மீரில் கொடூரம்.. மருத்துவர், 5 கட்டுமான பணியாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சமூக வலைத்தளபதிவும், அதனை மேற்கோளிட்டு முதல்வர் தெரிவித்துள்ள பாராட்டும்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)