CRFP Officials Patrol (Photo Credit: @AnnNewsKashmir X)

அக்டோபர் 21, குந்த் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் (JK Terror Attack) மாநிலத்தில் உள்ள சுந்தர்பால் மாவட்டம், குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான நிறுவன தொழிலாளர்களுக்காக சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே தற்காலிக்காக குடியிருப்பும் செயல்பட்டு வருகிறது.

6 பேர் பலி:

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு நேரத்தில் துப்பாக்கியுடன் அங்கு நுழைந்த பயங்கரவாதிகள், திடீர் துப்பாக்கிசூடு சம்பவத்தை நடத்தினர். இந்த சம்பவத்தில் மருத்துவர், வெளிமாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். Today Gold Price: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.58,400 க்கு விற்பனை.! 

பாதுகாப்பு அதிகரிப்பு, தேடுதல் வேட்டை தீவிரம்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிந்துள்ளனர். மேலும், தலைமறைவான பயங்கரவாதிகளுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் லக்னோவை சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், மருத்துவர்கள் கொல்லப்பட்டது உறுதியானது. இவர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக பணிக்கு வந்த நபர்கள் ஆவார்கள்.

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து, தேசிய மாநாடுகட்சி - காங்கிரஸ் கூட்டணியின் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காட்சிகள்: