Ramanathapuram: 350 கிலோ எடையுள்ள யானை காது மீன் - ராமநாதபுரம் மீனவர்கள் மகிழ்ச்சி.!

ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள யானை காது மீனை பிடித்த இராமநாதபுரம் மீனவர்கள், ரூ.20000 க்கு விற்பனை செய்து மகிழ்ந்தனர்.

Elephant Ear Fish (Photo Credit: @IANS X)

டிசம்பர் 28, இராமநாதபுரம் (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சமீபத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இருந்தனர். இதனிடையே, அவர்கள் இன்று காலை கரைதிரும்பிய நிலையில், அவர்களின் வலையில் 350 கிலோ எடையுள்ள அரியவகை யானை காது மீன் சிக்கி இருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதியில் மீனம்பிடித்தபோது, இந்த மீன் சிக்கியது. யானை காது மீன் ரூ.20000 விலைக்கு எடுக்கப்பட்டதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக, சில நாட்களுக்கு முன் பாம்பன் மீனவர்கள் 400 கிலோ எடையுள்ள அரியவகை வாள் மீனை ரூ.56000 க்கு விற்பனை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. Ramanthapuram News: பாம்பன் மீனவர்களிடம் சிக்கிய வாள் மீன் ரூ.56,000 க்கு விற்பனை.. மீனவர்கள் மகிழ்ச்சி.! 

யானை காது மீனை பிடித்து இலாபம் பார்த்த மகிழ்ச்சியில் மீனவர்கள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now