TN Weather Update: மதியம் 1 மணிவரை 26 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rains (Photo Credit: @HTTimes X)

ஜூலை 17, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாக வாய்ப்புள்ளது. அதனால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும். மேலும் தமிழ்நாட்டில் இன்று 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Bajaj Freedom 125 CNG Bike Bookings Open: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. வாங்கிய முதல் கஸ்டமர்..!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement